கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு
2009 இற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் காணி வியாழக்கிழமை (14) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இரத்தினபுரம் வீதி பக்கமாக இக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. காணி விடுவித்தலுக்கான ஆவணத்தை இராணுவ அதிகாரி மாவட்ட அரச அதிபரிடம் கையளித்தார்.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கரைச்சி பிரதேச செயலாளர், இராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துக்களேதுமில்லை