மதுபானசாலையை அகற்றுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம்!
யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இப்போராட்டம் தொடர்பான மகஜர் வடக்கு மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர் உள்ளிட்டவர்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை