வில்பத்து சரணாலயத்திலுள்ள விலங்குகள் பறவைகள் கடும் வரட்சியால் நீரின்றி தவிப்பு

வரட்சியான காலங்களில் விலங்குகள் பறவைகள் நீர் அருந்துவதற்காக வனவிலங்கு அதிகாரிகளால் வில்பத்து சரணாலயத்தில் ஆங்காங்கே குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்துவதற்காக 3 நாள்களுக்கு ஒருமுறை அமைக்கப்பட்டுள்ள குட்டைகளுக்கு வாகனங்களில் சென்று நீர் ஊற்றி வருவதாக எலுவாங்குளம் வில்பத்து சரணாலய வனவிலங்குத் திணைக்களத்துக்கு பொருப்பான  அதிகாரி ஜயவீர தெரிவித்தார்.

இதனால் குறித்த குட்டைகளில் விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்தி தாகத்தை தீர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சிக் காரணமாக விலங்குகள் மற்றும் பறவைகள் நீர் அருந்துவதற்கு நீரைப் பெறும் கலா ஓயா ஆற்றின் நீரின் மட்டமும் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.