சுன்னாகம், கைதடி லயன்ஸ் கழகங்களினால் கண் பரிசோதனையும் கண்ணாடி வழங்கலும்!

 

சுன்னாகம், கந்தரோடை, கற்பக்குணையில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் கைதடி லயன்ஸ் கழக உறுப்பினர்களான லயன் மகேந்திரன், லயன் நிர்மலா ஆகியோரின் இலவசக் கண்பரிசோதனை உதவியுடன் லயன் மகாதேவா – லயன் பூமாதேவி ஆகியோரின் ஞாபகார்த்தமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 300 பேருக்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கிவைக்கப்பட்டன.

லயன்ஸ் கழக மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் பீற்றரின் பிறந்ததினத்தை முன்னிட்டு அவரது 6 அம்சத் திட்டத்துக்கு அமைவாக மேற்படி கழகங்களால் இந்தச் செயற்றிட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இந்தக் கண்ணாடிகளில் 400 கண்ணாடிகளை சுனடனாகம் லயன்ஸ் கழக உறுப்பினர் லயன் மகாதேவா பிரிதுவிராஜாவும் 150 கண்ணாடிகளை கொமர்சல்வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் மோதர மட்டக்குழி லயன்ஸ் கழக உறுப்பினருமான லயன் சிவ. ரங்கநாதனும் அனுசரணை வழங்கினார்கள்.

வலி.தெற்கு பிரதேசத்தைவிட யாழ்.மாவட்டத்தின் பல இடங்களிலும் இருந்து பயனாளிகள் வந்து பயனடைந்தனர் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் சுன்னாகம் லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்தவர்களான ஆளுநரின் ஆலோசகர் லயன் சி.ஹரிகரன், பிராந்தியத் தலைவர் லயன் பா.மரியதாஸ், வலயத் தலைவர் லயன் க.டினேஷ், மாவட்டத் தலைவர் லயன் தே.அகிலன், லயன்ஸ் மகளிர் அணி மாவட்ட இணைப்பாளர் லயன் ஹ.கௌசலாதேவி மற்றும் கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் ஆகியோரும், கைதடி லயன்ஸ் கழகத்தைச் சேர்ந்த ஆளுநர் சபை நிர்வாக உத்தியோகத்தர் லயன் மகேந்திரன், லயன் மகளிர் அணி பிரதி செயலாளர் லயன் ம.நிர்மலா ஆகியோரும் கலந்து கண்ணாடிகளை வழங்கிவைத்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.