தமிழர், சிங்களவர் என்ற மனநிலையிலேயே பொலிஸாரின் நடவடிக்கைகள் காணப்படுகின்றன – கஜேந்திரன் மீதான தாக்குதலுக்கு சந்திரகுமார் கண்டனம்

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் பொலிஸார் முன்னிலையில் சில ரௌடிகளால் தாக்கப்படும் போது பொலிஸார் நடந்துகொண்ட விதம் மிகவும் கண்டனத்திற்குரியது என முன்னாள் பாராளுமன்ற சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

செல்வராசா கஜேந்திரன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினர், அவர் இந்த நாட்டின் ஓர் உயர்ந்த சபையின் கௌரவ உறுப்பினர் அவரை தெருவில் ஒன்று கூடிய சில ரௌடிகள் சட்டத்தை பாதுகாக்க வேண்டிய பொலிஸாரின் முன்னிலையில் தாக்குவது என்பது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல்.

தமிழ் மக்களின் பிரதிநிதி ஒருவருக்கே இந்த நிலைமை என்றால் இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமை எப்படியிருக்கும்? வன்முறைகளை தடுத்து சட்டத்தை நிலைநிறுத்த வேண்டிய பொலிஸார் அந்த இடத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காது இருந்தது என்பது தமிழ் மக்கள் விடயத்தில் அவர்களின் நிலைப்பாட்டை அப்பட்டமாக காட்டி நிற்கிறது.

இதுதான் இந்த நாட்டின் நிலைமை, தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடாத்தப்படுகிறார்கள் என்பதற்கு கஜேந்திரன் மீதான தாக்குதல் சம்பவம் என்பது ஒரு நல்ல உதாரணம் எனத் தெரிவித்த அவர் நினைவேந்தலுக்கான உரிமை வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனை மேற்கொள்ளவிடாது வன்முறையில் ஈடுப்பட்டவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது மட்டுமன்றி மக்கள் பிரதிநிதி ஒருவரை வீதியில் விரட்டி விரட்டி தாக்குபவர்கள் மீதும் அந்த தாக்குதல் சம்வத்தை கட்டுப்படுத்தாது நின்ற பொலிஸார் மீதும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படல் வேண்டும்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.