யாழில் ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்சிகள் முன்னெடுப்பு!
ஓசோன் படை பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு யாழ் சுதுமலை சிம்மிய பாரதி வித்தியாலயத்தில் இன்றைய தினம் பல்வேறு போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதன்போது வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாடசாலை முதல்வர் துரைரட்ணம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைக்கழக புவியில்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி.நாகமுத்து பிரதீபராஜா கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் வலிகாமம் கல்வி வலய சுற்றாடல் முன்னோடி வலய ஆணையாளர் ப.அருந்தவம், எதிர்காலத்திற்கான சுற்றுச்சூழல் கழக தலைவர் மற்றும் செயலாளர்களாகிய லி.கேதீஸ்வரன், ம.சசிகரன், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
சர்வதேச ஓசோன் படை பாதுகாப்பு தினம் வருடம்தோரும் செப்டம்பர் மாதம் 16 ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை