புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பொது மக்கள் போராட்டம்!

தாரபுரம் மன்/அல்மினா மகா வித்தியாலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபருக்கு எதிர்ப்பு தெரிவித்து  பொது மக்களால் அப்பாடசாலைக்கு முன்பாக  இன்றைய தினம் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்” குறித்த பாடசாலையில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பெறுபேறுகள் தொடர்சியாக சரிவு நிலையில் காணப்படுவதாகவும், பாடசாலையின் பழைய மாணவர் சங்கமும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் தங்களது பதவி காலம் நிறைவடைந்தும் பாடசாலையின் நிர்வாகத்தில் தலையீடு செய்வதாகவும்” குற்றம் சுமத்தினர்.

அதே நேரம் அதிபர் தகுதியைப்  பூர்த்தி செய்து நேர்முக தேர்வில் கலந்து கொண்ட தாராபுரம் கிராமத்தை சேர்ந்த அதிபரை நியமிக்குமாறும் இதன்போது  வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் இது தொடர்பில் தாங்கள் எழுத்து மூல மகஜர் ஒன்றினை உயர் அதிகாரிகளுக்கு கையளித்ததாகவும் குறித்த மகஜர் தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.