தேசிய மட்டம் தெரிவான சாதனையாளர் கௌரவம்
நூருல் ஹூதா உமர்
கல்வி அமைச்சால், அண்மையில் நடத்தப்பட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டியில், மாகாண மட்ட போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான கௌரவிப்பு புதன்கிழமை அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியின் காலை ஆராதனையின் போது மாகாண மட்டத்தில், கிறியேற்றிவ் றைற்றிங் இல் முதலிடம் பெற்ற தரம் 9 இனைச் சேர்ந்த சி. ஆர்.மாக் அஹ்மத், மாகாணப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற தரம் 13 இனைச் சேர்ந்த என். பாத்திமா அறூப், சிரேஸ்ட நாடகப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த நாடக் குழுவினர்களுக்கான பதக்கங்கள், கல்லூரி முதல்வர், பிரதி முதல்வர் மற்றும் ஆசிரியர்களால் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை குறித்த மாகாணப் போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற மாணவர்கள் இம்மாதம் இடம் பெறும் தேசிய மட்டப் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை