அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக விசேட கலந்துரையாடல்!

அறுகம்பை சுற்றுலா அபிவிருத்தித் திட்டத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையிலேயே அந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

அறுகம்பை பகுதியை அடிப்படையாக கொண்டு அம்பாறை மாட்டத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் முதற்கட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது அறியப்பட்ட பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது.

அதற்கமைய இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாட்டின் போது ஏற்படும் சவால்கள் தொடர்பாக இங்க விரிவாக அவதானம் செலுத்தப்பட்டது.

அத்தோடு, அதற்கான தீர்வுகளை பெற்றுக்கொள்தற்காக துறைசார் நிறுவனங்களின் தலையீடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட சுற்றுலாத்துறை திட்டமும் வெளியிடப்பட்டதோடு, மூன்று வருடங்களுக்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதியின் கருத்தறிவதற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்தச் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்காக மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.