மட்டக்களப்பில் ‘சர்வதேச நீதிப் பொறிமுறை கோரி` கவனயீர்ப்புப் போராட்டம்!
மட்டக்களப்பில் இலங்கையில் இடம்பெற்ற போர்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிப் பொறிமுனையை உறுதிசெய்யுமாறு கோரி இன்று (21) காந்தி பூங்காவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்குபற்றியிருந்தனர். இதன்போது ஜ.நாவிற்கான அறிக்கை ஒன்றையும் மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் ஆர்பாட்டகாரர்கள் கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை