தாய்மாருக்கும் சிறுவர்களுக்கு திரிபோஷா வழங்க இலங்கைக்கு அமெரிக்கா உதவி
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் அமைப்பு, இலங்கையில் திரிபோஷா வலுவூட்டப்பட்ட உணவுத் திட்டத்தைத் முன்னெடுக்கும் முகமாக 4 ஆயிரத்து 700 மெற்றிக் தொன் சோயா பீன்ஸ் மற்றும் கணிசமான அளவு மக்காச்சோளத்தை இலங்கை திரிபோஷா லிமிடெட் நிறுவனத்திடம் கையளிக்கும் நிகழ்ச்ச ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் ஏற்பாட்டில் திரிபோஷா தொழிற்சாலையில் இடம்பெற்றது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கில் டபிள்யு.எவ்.பியால் முன்னெடுக்கும் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் முகமாக, 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை யு.எஸ்.எயிட் அமைப்பு வழங்குகின்றது.
இலங்கை மற்றும் உலகலாவிய ரீதியில் பாரிய உதவிகளை முன்னெடுத்துவரும் ஐக்கிய அமெரிக்காவானது டபிள்யு.எவ்.பியினூடாக இலங்கையில் உணவு பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பொருளாதார, உணவு மற்றும் பெறுமதிசேர் வவுச்சர்களையும் வழங்கிவருகின்ற அதேவேளை தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து நிகழ்ச்சி திட்டம், பாடசாலை உணவு திட்டம் மற்றும் திரிபோஷா வலுவூட்டப்பட்ட உணவு திட்டத்திற்கும் உதவிவருகின்றது.
‘இலங்கைச் சிறார்களின் போசனைக் குறைப்பாட்டைத் தடுப்பதற்குத் தேவையான திரிபோஷவை தயாரிப்பதற்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருள்களான வலுவூட்டப்பட்ட உணவு பதார்த்தங்களாக நாங்கள் வழங்குவதன் மூலம் இலங்கையுடன் நாம் பேணிவரும் நீண்ட கால உறவை வலுப்படுத்திக்கொள்கின்றோம்’ என யு.எஸ்.எயிட் அமைப்பின், நிர்வாக மற்றும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தொகைக்கான அலுவலகத்தின் இயக்குநர் எஸ்டா சின்போ கூறினார்.
கடந்த வருடம் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவிற்கு முகம்கொடுக்கும் வகையில் சோயா பீன்ஸ் மற்றும் கணிசமான அளவு மக்காச்சோளத்தை எமது பங்காளிகளான உலக உணவு திட்டம் மற்றும் சுகாதார அமைச்சகம் என்பவற்றினூடாக திரிபோஷ தொழிற்சாலைக்கு கொண்டு வந்து சேர்ந்ததை நாம் காணக்கூடியதாகவிருந்தது. யு.எஸ்.எயிட் ஆனது 1973 ஆண்டு தொடக்கம் திரிபோஷ தயாரிப்பதற்கு உதவி வருகின்றது.
இலங்கையிலுள்ள சிறார்கள் மற்றும் தாய்மார்களின் ஊட்டத்தை வழுப்படுத்துவதற்கு எமது கூட்டினைவானது பங்காற்றி வருவதை எண்ணும்போது மிகவும் மகிழ்சியளிக்கின்றது.
நாட்டின் பொருளாதார சரிவால் தொழில்களை இழந்து, வருமானம் நலிவடைந்த மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஊட்டச்சத்து நிறைந்த உணவைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் மக்களிடையே குறைவடைந்துள்ளன.
வறுமையில் வாழும் மக்கள் குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், தாய்பாலுட்டும் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகள் போன்றவர்கள் ஊட்டசத்து குறைப்பாட்டை எதிர்கொண்டுள்ளனர்.
‘நாட்டின் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் பெண்களை பற்றியோ நாம் கூடுதலாக கவலைப்படுகின்றோம்.’ என டபிள்யு.எவ்.பி. இன் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பணிப்பாளர் ஜெராட் ரெபெல்லோ தெரிவித்தார்.
‘இலகுவில் பாதிக்கப்படக்கூடிய இம் மக்களுக்கு ஆதரவளிப்பதில் அமெரிக்கா வழங்கிவரும் உதவிக்கும் மற்றும் அவர்களின் கருனை உள்ளத்திற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம். இதனால் தமக்கு மிகவும் அவசியமான ஊட்டச்சத்தை இம் மக்கள் பெற்றுக்கொள்கின்றார்கள். அபிவிருத்திச் செயற்பாட்டை வலுவூட்டுவதற்கும் மற்றும் பொருளாதார நெருக்கடியின் நீண்ட கால பாதிப்புக்களை குறைப்பதற்கும். எமது அவசரகால செயற்பாட்டின் ஓர் அங்கமாக திரிபோஷா நிகழ்ச்சி திட்டத்திற்கு டபிள்யு.எவ்.பி. ஆதரவ நல்கிவருகின்றது.’
அத்தியாவசிய ஊட்டச்சத்துடன் தொடர்ச்சியான உணவை உட்கொள்வதற்கான துணை உணவாக திரிபோஷா உள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிகழ்ச்சியின் ஊடாக இது இலவசமாக வழங்கப்படுகின்றது. அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள திரிபோஷா தயாரிப்பதற்கான மூலப்பொருள்கள் கர்ப்பிணித் தாய்மார்கள்;, தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் ஐந்து வயதுக்குட்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுடைய சிறுவர்கள் உள்ளடங்கலாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு நான்கு சுற்று திரிபோஷா பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.
அமெரிக்கா போன்ற நிதியுதவியாளர்களின் நிதியுதவியுடன் டபிள்யு.எவ்.பி. ஆனது, 2022 ஜுன் மாதம் முதல் தமது அவசரகால நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக 3.8 மில்லியன் மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்தை வழங்கியுள்ளது.
யுஎஸ்எய்ட்டின் நிர்வாக மற்றும் இலகுவில் பாதிப்புக்குள்ளாகும் மக்கள் தொகைக்கான அலுவலகத்தின் இயக்குநர், எஸ்டா சின்போ அவர்கள் சோயா மற்றும் சோளம் கொண்ட தொகுதியை இலங்கை திரிபோஷா லிமிடட்டின் தலைவர் தீப்தி குலரத்னவிடம் கையளித்தார்.
இதில் டபிள்யு.எவ்.பி. ஒத்துழைப்புக்கான பங்காளித்துவ செயலகத்தின் பணிப்பாளர் டபிள்யு.டபிள்யு.எஸ். மங்கள மற்றும் டபிள்யு.எவ்.பி. இலங்கையின் பிரதி வதிவிடப் பணிப்பாளர் ஜெரார்ட் ரெபெல்லோ ஆகியாரும் பிரசன்னமாகியிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை