ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பு குறித்து இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதன்போது சுமந்திரனின் சமீபத்திய அமெரிக்க பயணம், திருத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் வடக்கில் பாரிய புதைகுழிகள் கண்டறியப்பட்டமை குறித்து பேசியாக கூறியுள்ளார்.

மோதல்களின் முடிவில் நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நினைவுகூர்ந்த அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்,
சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்பாட்டில் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தையும், நிலையான சமாதானத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் வலியுறுத்தினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.