கருத்துச்சுதந்திரத்தை இழந்து ஸ்திரதன்மையை பெறமுடியாது! அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடித்துரைப்பு

கருத்துசுதந்திரத்தை இழந்து ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ளக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

கருத்துச்சுதந்திரதின் மதிப்புகளை தியாகம் செய்வதன் மூலம் ஸ்திரதன்மையை பெற்றுக்கொள்ளக்கூடாது என அவர் கொழும்பில் இடம்பெற்ற சர்வதேச சமாதான நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எதிர்காலம் குறித்து இலட்சியத்துடன் இருப்போம் பொருளாதார ஸ்திரதன்மை குறித்த இலட்சியம்- அரசியல் ஸ்திரதன்மை புதுமையைக் கட்டியெழுப்புதல் போன்ற இலட்சியங்கள் எனத் தெரிவித்துள்ள அவர் அதேவேளை நாங்கள் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல் ஊழலிற்கு எதிரான மாற்றங்கள் குறித்தும் இலட்சியங்களுடன் காணப்படுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் உலகத் தலைவர்கள் ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஒன்றுகூடினார்கள். சமாதானம் பற்றி அதிகளவில் பேசப்பட்டது. ஆனால் சமாதானம் என்பது கரங்களில் சிக்காத விடயமாக இருக்கலாம். உக்ரைனின் ஈவிரக்கமற்ற ஆக்கிரமிப்பு சூடானின் மனிதாபிமான நெருக்கடி போன்றவற்றின் மூலம் இதனை நாங்கள் பார்க்க முடிகின்றது எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

சமாதானம் எப்படி ஒரு நாள் காணப்படும் மறுநாள் மாற்றமடையும் இல்லாமல் போகும் எனத் தெரிவித்துள்ள அவர் மீண்டும் சமாதானத்தை ஏற்படுத்த பல வருடங்கள் எடுக்கலாம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் நாங்கள் ஜனநாயகங்கள் ஆபத்தில் உள்ளதைப் பார்க்கின்றோம். சில ஆபத்துக்கள் உள்ளேயிருந்து வருகின்றன -மனக்கசப்புகளை பயன்படுத்துபவர்களால் சமாதானத்திற்கு பதில் அச்சத்தை ஏற்படுத்துபவர்களால் அவை தூண்டப்படுகின்றன எனவும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.