அதிபர் உட்பட 4 ஆசிரியர்களை உடன் இட மாற்றம் செய்யுங்கள்! ஹற்றனில் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட, பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் உட்பட ஆசிரியர்கள் 4 பேரை உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கோரி 200 இற்கும் மேட்பட்ட பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்களிடையே முறையான ஒழுக்கம் காணப்படுவதில்லை எனவும் ஒரு சில ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்வதில்லை எனவும் தெரிவித்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த பகுதிக்கு வருகை தந்த கோட்டக் கல்வி பணிப்பாளர் என். சிவகுமார் மேற்படி விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பெற்றோருக்குத் தெரிவித்தார்.
இந்நிலையில் பாடசாலைக்கு புதிய அதிபரை நியமிக்காமல் தற்போது உள்ள அதிபரையே மீண்டும் நியமித்தால் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை