கருத்துச் சுதந்திரத்தின் அவசியத்தை இலங்கையிடம் பிரித்தானியா வலியுறுத்து

கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான சுதந்திரம் என்பவற்றின் அவசியம் குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸிடம் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது பாதுகாப்புத்துறையுடன் தொடர்புடைய பரந்துபட்ட விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் என்பன தொடர்பில் இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டதாகவும், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை அமைச்சர் டிரால் அலஸிடம் அன்ட்ரூ பற்ரிக் வலியுறுத்தினார் எனவும் உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.