கல்முனை பாடசாலை மாணவர்களுக்கு போசனை நிறைந்த பிஸ்கெட் வழங்கல்
நூருல் ஹூதா உமர்
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் போசனை முகாமைத்துவம் என்பனவற்றை கருத்தில் கொண்டு பாடசாலை மாணவர்களின் போசாக்கை மேம்படுத்தும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையால் முன்னெடுக்கப்பட்டு வரும் போசாக்கு உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டத்தின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட சில பாடசாலைகளுக்கு போசாக்கு நிறைந்த பிஸ்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண கௌரவ ஆளுநர் செந்தில் தொண்டமானின் வேண்டுகோளுக்கு அமைவாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் மாகாண சுதேச மருத்துவ திணைக்களத்தின் வழிகாட்டலுக்கமைவாகவும் அக்கரைப்பற்று ஆயுர்வேத மருந்து உற்பத்தி பிரிவால் தயாரிக்கப்பட்ட போசாக்கு பிஸ்கட்டுகளை பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்றது.
கல்முனைப் பிராந்தியத்தில் தெரிவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை கமுஃஅக்ஃஅல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலை, நிந்தவூர் கமுஃகமுஃஜெர்மன் நட்புறவு கனிஷ்ட பாடசாலை, அட்டப்பள்ளம் கமுஃகமுஃஸஹிதா வித்தியாலயம் என மூன்று பாடசாலைகளின் மாணவர்களுக்கே மேற்படி போசாக்கு பிஸ்கட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் எம்.பீ.அப்துல் வாஜித், தொற்றா நோய்ப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஐ.எம்.எஸ். இர்ஷாத், கல்முனை பிராந்திய ஆயுர்வேத பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.நபீல், அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்திய சாலை வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எல்.அப்துல் ஹை, ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
ஆயுர்வேத மருந்துப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட பல்வேறு போசாக்கு கூறுகள் அடங்கிய குறித்த பிஸ்கட்டுக்கள் சுவை மற்றும் தரம் வாய்ந்ததாக உள்ளதாகவும் அவற்றைத் தொடர்ந்தும் வழங்க வேண்டும் எனவும் பாடசாலை மாணவர்கள் இதன்போது குறிப்பிட்டனர்.
கருத்துக்களேதுமில்லை