நாவிதன்வெளியில் யானை அட்டகாசத்தால் நெல் களஞ்சியசாலையில் பாரியளவு சேதம்

அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி – சவளக்கடை பிரதேசத்துக்குள் சனிக்கிழமை இரவு புகுந்த யானைகள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள நெல் களஞ்சியசாலையை துவம்சம் செய்துள்ளன.

மேலும், அங்கிருந்த நெல் மூடைகளை நாசப்படுத்தியதுடன் அப்பகுதியில் உள்ள சுற்றுவேலிகளையும் யானைகள் தகர்த்துள்ளன.

அதேவேளை அந்தப் பிரதேசத்தை அண்டிய பகுதியிலுள்ள சில பயிர்களுக்கும் பாரியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு வேளைகளில் அப்பகுதியில் வசிப்பதற்கு பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.