யாழில். காந்தியின் 154 ஆவது ஜனதின நினைவேந்தல்
யாழ்ப்பாணம் – இந்திய உதவித்துணைத் தூதரகம்,மற்றும் காந்தி சேவா சங்கத்தின் இணைந்த ஏற்பாட்டில் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தினை பெற்றுக்கொடுத்த மகாத்மா காந்தி அவர்களின் 154ஆவது ஜனதின நினைவேந்தலான அஞ்சலி இன்று திங்கட்கிழமை (02) யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு முன்பாக இருக்கின்ற மகாத்மா காந்தி சிலையின் முன்பாக இடம்பெற்றது.
இவ் நிகழ்வுக்கு முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் இந்திய உதவித்துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு அவரின் திருச்சுருவத்திற்கான மலர்மாலை அணிவித்து நினைவேந்தல் செலுத்தினார்.
இதில் காந்தி சேவா சங்கத்தினால் வருடாந்த வெளியீட்டு வரும் காந்தீயம் சஞ்சிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.
இதில் வடமாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சி சிவஞானம், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்திரன், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் கலாநிதி த.சத்தியமூர்த்தி, யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா, மதத்தலைவர்கள், யாழ்ப்பாண பல்கலைகழக சிரேஸ்ட துணைநிலை பேராசிரியர்கள், கலைத்துறையினர்கள், ஊடகவியாளர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டு நினைவஞ்சலியினை செலுத்தினர்.
கருத்துக்களேதுமில்லை