வடக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

வட மாகாண ஆளுநர்  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்  கோபால் பாக்லேவை கொழும்பில் அமைந்துள்ள இந்தியா இல்லத்தில் சந்தித்தார்.

சந்திப்பின் போது  ஆளுநர் வடக்கின் எதிர்கால வளர்ச்சி குறித்து தாம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார். அதேவேளையில் இந்திய அரசாங்கம் கடந்த காலங்களில் வழங்கிய ஆதரவிற்கு தமது நன்றியினையும் தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் வடக்கின் அபிவிருத்திக்கும் தங்களது தொடர்ச்சியான ஆதரவு உறுதி என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.