ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 21 ஆண்டுகளின் பின்னர் தங்கம்!
சீனாவில் நடைபெற்றுவரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இவர் குறித்த தூரத்தை ஓடி முடிக்க 2.03.20 நிமிடங்களை எடுத்துக்கொண்டார்.
21 வருடங்களின் பின்னர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு கிடைத்த முதல் தங்கப் பதக்கம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதே வேளை செவ்வாய்க்கிழமை நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நதிஷா வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (
கருத்துக்களேதுமில்லை