வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மக்களுக்கு நற்செய்தி!
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தறை மாவட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக, மாத்தறை மாவட்டத்தில் 2113 குடும்பங்களைச் சேர்ந்த 8591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மாத்தறை மாவட்ட மக்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மாத்தறை மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அந்த மக்களுக்கு அவசியமான சமைத்த உணவு மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய வசதிகளை குறைவின்றி வழங்குமாறும் அதற்காக பொலிஸார் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பைப் பெறுமாறும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் வெள்ளப்பெருக்கு அதிகரிக்கும் பட்சத்தில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான முன்னாயத்தங்களை மேற்கொள்ளுமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட துறையினர்களுக்கு அறிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை