மைத்திரியின் கார் மீது விழுந்த அதிவேக நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கேட் !
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வானத்தின் மீது சுங்கச்சாவடி கேட் விழுந்த சம்பவம் குறித்து வி.ஐ.பி பாதுகாப்புப் பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை காலை மத்திய அதிவேக நெடுஞ்சாலை ஊடாக பயணம் செய்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் கார் மீது டோல் கேட் விழுந்து விபத்துக்குள்ளானது இது இரண்டாவது சந்தர்ப்பம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு முறையும் பணியில் இருந்தது ஒரே அதிகாரியா அல்லது இது தற்செயலானதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
கருத்துக்களேதுமில்லை