மீரிகம – நீர்கொழும்பு வீதியில் கோரவிபத்து! சாரதி உயிரிழப்பு
மீரிகம – நீர்கொழும்பு வீதியில், கொட்டதெனிய, வெலிஹிந்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பஸ் சாரதி துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (06) காலை மணல் ஏற்றி சென்ற லொறி ஒன்றுடன் தனியார் பஸ் ஒன்று மோதி விபத்துள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் லொறி மற்றும் பஸ் ஆகியவற்றின் முன்பகுதி முற்றாக சேதமடைந்துள்ளன.
கருத்துக்களேதுமில்லை