நிட்டம்புவ, குளியாப்பிட்டியில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட 35 பேர் காயம்
நிட்டம்புவ மற்றும் குளியாப்பிட்டிய பகுதிகளில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 35 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரு விபத்திலும் இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான இரு பஸ் வண்டிகளே விபத்திற்குள்ளாகியுள்ளன.
இருவேறு விபத்துகளிலும் 15 பாடசாலை மாணவர்கள் உட்பட 35 இற்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
நிட்டம்புவ பஸ் விபத்தில் 22 பேரும் குளியாப்பிட்டியவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 13 பேரும் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை