தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகர் கடமையேற்பு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ஏ.தேவநேசன் நியமிக்கப்பட்டு இன்று (வெள்ளிக்கிழமை) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இதுவரை காலமும் வைத்திய அத்தியட்சகராகக் கடமையாற்றிய வைத்தியர் எம்.எம்.றெமான்ஸ், உயர் கல்வியைத் தொடர்வதற்காக செல்ல உள்hர்.

இந்நிலையில் புதிய வைத்திய அத்தியட்சகராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற வைத்தியர் ஏ.தேவநேசனை வைத்தியசாலையின் தற்போதைய வைத்திய அத்தியட்சகர் மாலை அணிவித்து வரவேற்று அழைத்துச்சென்று வைத்தியசாலையின் தற்போதைய நிலைமை, அபிவிருத்தி என்பன தொடர்பில் தெளிவுபடு;தினார்.

இந்த நிகழ்வில் வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோகத்தர், வைத்திய நிபுணர்கள், தாதிய பரிபாலகிகள், மற்றும் வைத்தியர்கள், விடுதி பொறுப்பு தாதிய உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மேற்பார்வையாளர்கள், மருத்துவ உதவியார்கள் மற்றும் பரிசாரகர்கள், சுகாதார பணி உதவியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு புதிய வைத்திய அத்தியட்சகர் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

வைத்தியர் தேவநேசன், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளராக, ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளராக என சுகாதாரத் துறையிவ் நீண்ட அனுபவம் மிக்க ஒரு சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாவார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.