சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண சஜித் தலைமையில் விசேட குழு நியமனம்!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவும், சுகாதாரத் துறையுடன் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் அவருக்கு நெருக்கமானவர்களும் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் மோசடியான கொடுக்கல் வாங்கல் உட்பட தற்போது சுகாதாரத்துறை எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரச் சீர்கேடு தொடர்பான மேலதிக தலையீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் எதிர்க்கட்சி ஒன்றியம் வெள்ளிக்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் கூடி கலந்துரையாடியது. இதன் போது இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தரக்குறைவான மருந்துப் பொருள்கள் பாவனையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எதிர்க்கட்சியில் இருந்து நிவாரணத் திட்டத்தை செயல்படுத்தவும், இந்த மோசடிகளில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை