ஆளுநர் சாள்ஸூக்காகக் காத்திருந்த யாழ். இந்திய துணை தூதரக நிகழ்வு 40 நிமிடங்கள் தாமதித்து வந்தார்
யாழ். இந்தியத் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த இந்திய பொருளாதார ஒத்துழைப்பு தின நிகழ்வுக்காக வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் அழைக்கப்பட்டிருந்தார்.
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்வு 12 மணிக்கு ஆரம்பிக்கும் என ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநர் 12.40 தாண்டியும் குறித்த நிகழ்வுக்கு வருகை தரவில்லை.
நிகழ்வை ஏற்பாடு செய்த யாழ். இந்தியத் துணைத் தூதரகம் ஆளுநர் வருகை தாமதமாகவும் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாக ஒலி பெருக்கி யில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் பொறுமை இழந்த தூதரக உத்தியோகத்தர்கள் 12.40 மணிக்குப் பின்னர் ஆளுநர் வருகையை பாராது நிகழ்வை ஆரம்பித்தனர்.
ஏற்கனவே யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வடமாகாண ஆளுநர் பிரதம விருந்தினராக அழைக்கப்பட்ட நிலையில் குறித்த நிகழ்வில் ஆளுநர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை