நீதிபதி சரவணராஜாவுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவுக்கு நீதிகோரி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இன்று (திங்கட்கிழமை) கொழும்பு – புதுக்கடை நீதிமன்றத்திற்கு முன்னால், சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இன்று இந்த ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன்போது ”நீதித்துறை மீது கை வைக்காதே” என்னும் தொனிப்பொருளில் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை