ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் காயம்
இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர் ஒருவர் ஹமாஸ் நடத்திய வான்வழித் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரேலில் உள்ள ஹோட்டலில் வேலை பார்த்து வந்த அவருக்கு நேற்று இடம்பெற்ற மோதலின் போது ஒரு கை மற்றும் அவரது வயிற்றில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சனிக்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது மற்றுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இலங்கை தூதரகம் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை