வவுனியா, பம்பைமடுவில் விபத்து : 4 பிள்ளைகளின் தாய் பலி..!
வவுனியா பம்பைமடு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இன்று செவ்வாய்க்கிழமை (10) வவுனியா குருக்கல் புதுக்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பம்பைமடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குருக்கள் புதுக்குளத்தை சேர்ந்த 44வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாயாரான விஜயரத்தினம் ஜெயந்தினி என்பவர் உயிரிழந்துள்ளார்.
இதன் போது இவருடன் பயணித்த இவரது மகனான 22வயதுடைய சிஙறோஜன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த 24 மணி நேரத்திற்குள் வவுனியாவில் ஏற்பட்ட இரு வேறு விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் இரு விபத்துமே கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனால் பொதுமக்கள் உள்ளூராட்சி மன்றங்களை குற்றம் சுமத்துவதுடன் உயிரிழப்புக்களுக்கு இவர்களே பொறுப்புக்கூற வேண்டும் என பலரும் விசனம் தெரிவித்தும் வருகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை