தெல்;லிப்பழை ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகருக்கு கௌரவம்!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடந்த ஒருவருடகாலமாக சேவையாற்றி உயர் கல்வி கற்பதற்காக (வைத்திய நிபுணர் – நிர்வாகம்) வைத்தியசாலையை விட்டுச்செல்லும் வைத்தியர் எம்.எம்.றெமான்ஸூக்கு வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் வாழ்த்துக்களும், பாராட்டும் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நல்புரிச் சங்கச் செயலாளர் லயன் சி.ஹரிகரன் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், புதிய வைத்திய அத்தியட்சகராக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் வைத்தியர் தேவநேசன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்.
கடந்த ஒருவருட காலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் றெமான்ஸ் கடமையாற்றினாலும் திட்டமிடல் பிரிவு, தரநிர்ணய பிரிவு என இரு பிரிவுகளை உருவாக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை