சபாநாயகரின் பிறந்தநாள் : கேக் வெட்டி கொண்டாட்டம்
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும்; நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் பங்குபற்றுதலுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் திரு.சாகல ரத்நாயக்க மற்றும் ஜனாதிபதி பணிமனையின் பிரதானி திரு.சமன் ஏக்கநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துக்களேதுமில்லை