வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைவு!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்கவிற்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வனிந்து ஹசரங்க தனது உடலில் ஏற்பட்ட உபாதை காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில்,’ தனக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றியடைந்துள்ளதாகவும், நாட்டுக்காக உத்வேகத்துடன் களமிறங்குவேன் என நம்புவதாகவும்’ வனிந்து ஹசரங்க தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இச்செய்தியானது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துக்களேதுமில்லை