மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா!
கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் அமைச்சர் நசீர் அஹமட் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக அலி சாஹிர் மௌலானா புதன்கிழமை தெரிவு செய்யப்பட்டார்.
இந்தத் தீர்ப்பு அரசியல் கட்சிகளுக்கு ஒரு முக்கியமான முன்னுதாரணமாக அமைவதாக அலி சாஹிர் மௌலானா ருவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள தனது தொகுதி மக்களுக்கும், இலங்கைக்கும் உண்மையாக பணியாற்றவுள்ளதாக அலி சாஹிர் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை