இலங்கைக்குப் பெருமை சேர்த்த வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள் நாடு திரும்பிய நிலையில், அவர்களுக்கு விமானநிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் இரண்டு வெங்கலப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள், சீனாவிலிருந்து நாடு திரும்பினர்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு பதக்கத்தைக்கூட வெல்ல முடியாமல்போன இலங்கைக்கு, இம்முறை 5 பதக்கங்கள் கிடைத்திருந்தன.

விசேடமாக 21 வருடங்களுக்குப் பின்னரே இலங்கைக்கு இம்முறை, தருஷி கருணாரத்னவால் தங்கப்பதக்கம் கிடைத்தது.

45 நாடுகள் பங்கேற்ற இந்த விளையாட்டுப் போட்டியில் இலங்கை 26 ஆவது இடத்தில் பதக்கப்பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.