பல்கலைக்கழக விடுதிகளை சோதனைக்குட்படுத்த முடிவு! அமைச்சர் ராகவன் அதிரடி
‘பல்கலைக்கழக விடுதிகளை இரவு வேளைகளில் சோதனைக்கு உட்படுத்த தீர்மானித்துள்ளதாக’ உயர்கல்வி இராஜாங்க அமைச்சர், சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதிகளில் இடம்பெறும் பகிடிவதைகளைத் தடுக்கும் விதமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –
விடுதிகளில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 05 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவிலான பகிடிவதைகள் இடம்பெறுவதாகத் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையைத் தடுப்பதற்கான தேசிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்நடவடிக்கையில் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரிகளும், மாணவ ஆலோசகர்களும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அதுமட்டுமல்லாது பகிடிவதை சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக வட்ஸ் அப்p இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கிடைக்கப்பெறும் அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விரைவான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும். – இவ்வாறு சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை