உலகமுடிவு மலைதொடருக்கு செல்கின்ற வீதிக்குத் தடை!
நுவரெலியா மாவட்டத்தில் வெலிமடையில் ரேந்தபொல – அம்பேவல வீதியின் அண்மித்த பகுதியில் புதன்கிழமை மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் உலக முடிவு மலைத் தொடரை நோக்கி செல்லும் வீதி மூடப்பட்டுள்ளது.
மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் வீதி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், மண் சரிவு ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுவதால் இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை