சிறைச்சாலைகளுக்கான செலவு குறித்து இராஜாங்க அமைச்சர் ஜயரத்ன கருத்து!

திறைசேரி மீது சிறைச்சாலைகளுக்கான செலவுகள் ஏற்படுத்தும் சுமை குறித்த கலந்துரையாடலில் சிறை அமைப்புமுறையை  மீளமைப்பதற்கு இராஜாங்க அமைச்சர் ஆதரவு தெரிவிக்கிறார். அவருடைய கருத்துக்கு வலுச்சேர்ப்பதற்கு அவர் இரண்டு கூற்றுகளை முன்வைக்கிறார்:

1. (அ) தற்போதுள்ள சிறைக் கைதிகளின் எண்ணிக்கை 28,468. (ஆ) இவர்களில் அநேகமானவர்கள் (50.3வீதம்) போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் உள்ளனர். இந்த எண்ணிக்கை காலப்போக்கில் அதிகரித்து வருகிறது.

2. சிறை அமைப்பை நிர்வகிப்பதற்கு வருடாந்தம் ரூ.10 பில்லியன் செலவாகிறது. அந்தத் தொகையில் ரூ.3.9 பில்லியன் 28,000 சிறைக் கைதிகளின் உணவுச் செலவுகளுக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூற்றுகளைச் சரிபார்க்க, இலங்கை சிறைச்சாலைகளின் புள்ளிவிவரங்கள் 2023 அறிக்கையையும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்தையும்  ஆராய்ந்தது.

கூற்று 1 (அ): ஓகஸ்ட் 24, 2023 அன்று முதன்முறை தரவு சரிபார்க்கப்பட்டபோது, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைதளத்தில் கைதிகளின் எண்ணிக்கை 28,655 ஆகக் காணப்பட்டது. இந்த வலைதளம் நாளாந்த புதுப்பிப்புகளை வழங்குகிறது. ஆனால் கடந்த திகதிகளுக்கான எண்ணிக்கைகள் வழங்கப்படவில்லை. இந்த எண்ணிக்கை இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் 28,468 எனும் எண்ணிக்கையை (0.6 சதவீதத்தால்) விட சற்று அதிகமாகும். எனினும் இந்தக் கூற்று வெளியிடப்பட்ட திகதி (10 ஓகஸ்ட் 2023) அளவில் சரியாக இருந்திருக்கும்.

கூற்று 1 (ஆ): குற்றத்தின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கையை (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சிறையில் உள்ளவர்களின் எண்ணிக்கை)பி.எஸ்.ஆர். வழங்கவில்லை. மாறாக சிறைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை (அனுமதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை) மட்டுமே குறிப்பிடுகிறது. 2022 ஆம் ஆண்டில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது மொத்தக் கைதிகளின் சேர்க்கையில் 63 வீதம் என கிடைக்கும் சமீபத்திய தரவு குறிப்பிடுகிறது. எனவே அவருடைய கூற்று சரியானது எனத் தெரிகிறது. அதாவது போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சிறைக்கைதிகளில் பெரும்பான்மையானவர்களாக இருக்கிறார்கள்.

கூற்று 2:பி.எஸ்ஆர். அறிக்கையின் பிரகாரம், 2022 ஆம் ஆண்டில் சிறைச்சாலைகளின் மொத்த பராமரிப்புச் செலவினம் (மீண்டுவரும் செலவினம்) ரூ.9.8 பில்லியனான உள்ளது.பி.எஸ்.ஆர். ஒரு கைதிக்கான உணவுச் செலவினத்தையும் வழங்குகிறது. அதன் பிரகாரம் 2022 ஆம் ஆண்டில் மொத்த உணவுச் செலவினம் ரூ.176,115 ஆகும். இது ஒரு கைதிக்கான சராசரி மீண்டுவரும் செலவினத்தின் 40 வீதம் ஆகும். மொத்தச் செலவினமான ரூ.9.8 பில்லியனில் 40 வீதம் ரூ.3.9 பில்லியன், இது இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் பெறுமதி ஆகும்.

எனினும், இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் இரண்டு பெறுமதிகளும் (10 பில்லியன் மற்றும் 3.9 பில்லியன்) 2022 ஆம் ஆண்டுக்குரியவை. இதன் போது சராசரி நாளாந்த கைதிகளின் எண்ணிக்கை 22,000 ஆகக் காணப்பட்டது. அதேவேளை 2023 ஆம் ஆண்டில் இது 28,000 ஆகக் காணப்படுகிறது. 2023 ஆம் ஆண்டிற்கு இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் சராசரி பெறுமதிக்கு 2022 ஆம் ஆண்டைப் போன்றே நபர் ஒருவருக்கான சராசரி உணவுச் செலவினம் இருந்தாலும் கூட (உணவு பணவீக்கம் 62 சதவீதத்தை விட அதிகமாகியுள்ளது), வருடாந்த மொத்த உணவுச் செலவினம் ரூ.4.9 பில்லியனாக இருக்கும். எனவே இராஜாங்க அமைச்சர் 2023 ஆம் ஆண்டுக்குரிய கைதிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடும்போதும், 2022 ஆம் ஆண்டுக்கான செலவினங்களைக் குறிப்பிடுகிறார். உண்மையான பெறுமதிகள் அவர் குறிப்பிடுவதை விட 30மூ அதிகமாக இருக்கலாம். அவர் குறிப்பிடும் 2022 பெறுமதியை விட 2023ம் ஆண்டுக்கான பெறுமதிகள் அவரது ஒட்டுமொத்த வாதத்திற்கும் சாதகமாக இருக்கிறது.

கைதிகளின் எண்ணிக்கை மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் உள்ளவர்களின் சதவீதம் தொடர்பான இராஜாங்க அமைச்சரின் முதலாவது கூற்று கிடைக்கக்கூடிய தரவுகளுடன் பொருந்துகின்றன. இரண்டாவது கூற்றில், அவர் 2022 ஆம் ஆண்டுக்கான கைதிகளின் தரவைக் குறிப்பிடுகிறார். 2023 ஆம் ஆண்டுக்கான கைதிகளின் எண்ணிக்கையையாக அவர் அதைத் தவறாகக் குறிப்பிடுகிறார். எனினும் 2023 இற்கான தரவு அவரது ஒட்டுமொத்த வாதத்திற்கு மேலும் வலுச்சேர்க்கிறது.

ஆகவே அவரது அறிக்கையை நாங்கள் சரியானது என வகைப்படுத்துகிறோம்.

பகிரங்கமாகப் பொதுவெளியில் கிடைக்கக்கூடிய அண்மைத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே இணையத்தளம் தனது முடிவுகளை எட்டுகின்றது. புதிய தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் இந்த மதிப்பீடுகளை அது மறுபரிசீலனை செய்யும்.

இன்றைய நிலைவரப்படி, சிறைச்சாலைகளில் உள்ள மொத்தக் கைதிகளின் எண்ணிக்கை 28,468. ஜ…ஸ போதைப்பொருள் தொடர்பான குற்றவாளிகளின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்துவருகிறது. இன்றைய நிலைவரப்படி, மொத்தக் கைதிகளில் 50.3 சதவீதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள். சில சிறைகளில் சுமார் 65 சதவீதமானவர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் ஜ….ஸ இந்தக் காலப்பகுதியில், அதாவது 2021 ஆம் ஆண்டின் இறுதி ஆறு மாதங்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டில் 28 ஆயிரம் கைதிகளுக்காக அரசாங்கம் அவர்களின் உணவுக்காக மட்டும் ரூ.3.9 பில்லியனைச் செலவுசெய்துள்ளது. ஜ….ஸ சிறை நிர்வாகத்தின் ஒட்டுமொத்த பராமரிப்புச் செலவு சுமார் 10 பில்லியன் ஆகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.