மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்

மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்
தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கண்டி ஸ்ரீP தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய அரசு மாளிகைக்கு முன்னால் உள்ள அகழிக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பக்கவாட்டு சுவரின் மேற்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மண் சுவரின் ஒரு பகுதி நேற்று இரவு இடிந்து விழுந்துள்ளது.

கண்டி விஷ்ணு கோவிலுக்கு முன்பாக உள்ள தேவ சம்ஹிந்தாவிற்கு அருகில் உள்ள அகழியின் பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் இடிந்து விழுந்தது. தொல்லியல் திணைக்களத்தின் மேற்பார்வையில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் இதன் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கட்டுமான பணியின் போது, ஆறு மாதங்களுக்கு முன், ஐந்து மீட்டர் அளவுக்கு பக்கவாட்டு சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இம்முறை வரலாற்று சிறப்பு மிக்க அரச மாளிகையின் முன் பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதனால், அரசமரம் ஆபத்தான நிலையில் உள்ளதால், தொல்பொருள் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு அறிவித்து, அவ்விடத்தை உடனடியாக மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , தொல்பொருள் திணைக்களம் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று, குறித்த இடத்தை கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று கலந்துரையாடல் ஒன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.