இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைக்காதாம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ரங்கன் கூறுகிறார்
இரட்டை நிலைப்பாடு கொண்டவர்களால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்க முடியாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் –
தற்போது ஹர்த்தால் அனுஸ்டிக்கப்போவதாக சில கட்சிகள் சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றன எனத் தகவல்கள் வருகின்றன.
உண்மையில் மனிதச் சங்கிலி, ஹர்த்தால் போன்ற போராட்டங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்து அன்றாட ஜீவனோபாயத்திற்கு
ஏங்கும் எமது மக்களின் வறுமையை மேலும் அதிகரிக்குமே தவிர இவர்களது போராட்டத்தை தென்னிலங்கை கண்டுகொள்ளப் போவதில்லை.
மாறாக, வடக்கு கிழக்கில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் எனக்கூறி நடைபெறும் இவர்களது இவ்வாறான செயற்பாடுகள் தென்னிலங்கையின் சிங்கள தேசியத்தை வலுப்படுத்துவதற்கும் அதற்கான முகவர்களாக இவர்கள் செயற்படுகின்றார்கள் என்பதே பட்டவர்த்தமான உண்மையாகும். – என்றார்.
கருத்துக்களேதுமில்லை