பொகவந்தலாவையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை ஒன்று மீட்பு!
பொகவந்தலாவை பிரதேச தோட்டக் கம்பனிக்கு சொந்தமான லெதண்டி தோட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை சிறுத்தை ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் நான்கு அடி நீளம் கொண்ட சிறுத்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த தோட்டத்துக்கு தற்செயலாக வந்த நபர் ஒருவர் சிறுத்தையின் சடலத்தைக் கண்டு ஹற்றன் பொலிஸாருக்கும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலகத்துக்கும் உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற அதிகாரிகள் சிறுத்தையின் சடலத்தை சோதித்து குறித்த சிறுத்தை வேறு மிருகங்களின் தாக்குதலால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை