இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை காசாவில் நடக்கும் சம்பவங்கள் நினைவுபடுத்தல்! மார்க் சோல்டர் கருத்து

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன என பத்திரிகையாளரும் ஆய்வாளரும் எழுத்தாளருமான மார்க் சோல்டர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் நோர்வேயின் பங்களிப்பு குறித்த  என்ற நூலை எழுதிய மார்க்சோல்டர் தனது ருவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.

காசாவில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் இலங்கையின் இறுதிபோரின் ஆரம்ப தருணங்களை நினைவுபடுத்துகின்றன. அக்காலப்பகுதியில் இலங்கையில் பொதுமக்கள் அரசாங்கம் அறிவித்த உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

இதன் பிரதான விளைவு என்னவென்றால் தொடர்ச்சியான வான்வெளி ஆட்டிலறி தரைதாக்குதலால் பொதுமக்கள் உயிரிழப்புகள் பல மடங்காக அதிகரித்தன. விடுதலைப் புலிகளை பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட ஆயுதங்களை இலக்குவைத்து இலங்கை இராணுவத்தினர் இந்தத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.

எதிர்வரும் நாள்களில் காசாவில் இதுபோன்ற சூழ்நிலை ஏற்படாது என நம்புகின்றேன் பிரார்த்திக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.