அலி சாஹிர் மௌலானா எம்பியாக சத்தியப் பிரமாணம்: ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவிப்பு!

நஸீர் அஹமட்டின் வெற்றிடத்துக்கு  நியமிக்கப்பட்ட  அலி சாஹிர் மௌலானா இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் வாழ்த்துக்களுக்கு மத்தியில் எதிரணியின் பின்வரிசை ஆசனத்தில்  அமர்ந்து கொண்டார்.

நீதிமன்ற உத்தரவின்படி நஸீர் அஹமட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி அண்மையில் நீக்கப்பட்டது.

இதன்படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்டப் பட்டியலில் அடுத்த வேட்பாளராக களமிறங்கிய  அலி சாஹிர் மௌலானாவை அந்த இடத்துக்கு  நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.