முன்னாள் பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா காலமானார் !
முன்னாள் பொலிஸ்மா அதிபர் விக்டர் பெரேரா தனது 75 ஆவது வயதில் திங்கட்கிழமை (16) காலமானார்.
4 பிள்ளைகளின் தந்தையான விக்டர் பெரேரா, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (16) பிற்பகல் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
2006 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி 30 ஆவது பொலிஸ் மா அதிபராக பதவி உயர்வு பெற்று 2008 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை கடமையாற்றிய நிலையில், அவர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
விக்டர் பெரேரா வடமாகாணத்தின் முதலாவது ஆளுநராகவும் கடமையாற்றிய அதேவேளை, மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் முன்னாள் பொலிஸ் மா அதிபரும் ஆவார்.
கருத்துக்களேதுமில்லை