விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு புத்துயிரளிக்கவேண்டும்: வழக்கிலிருந்த விடுவிக்கப்பட்டார் விஜயகலா மகேஸ்வரன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு  புத்துயிரளிக்க வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்ததாகக் கூறப்பட்டு அவர் மீது தொடரப்பட்ட  வழக்கிலிருந்து அவரை விடுவிக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அப்போதைய சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக  விடுதலைப் புலிகளை மீண்டும் எழுப்ப வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.