ஒரே இலக்கம் கொண்ட 5000 ரூபா பெறுமதியான ஐந்து போலிநாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
ஒரே இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கதிர்காமம் பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
தெபரவௌ கெமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த வருடம் இரண்டு போலி 5, 000 ரூபா நாணயத்தாள்கள் மற்றும் அச்சிடும் இயந்திரத்துடன் கைது செய்யப்பட்டார் எனவும் பாடசாலை ஒன்றில் ஆய்வக அதிகாரியாகக் கடமையாற்றி வந்தார் எனவும், இந்த சம்பவத்தின் காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார் எனவும் திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்துக்களேதுமில்லை