போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – மைத்திரி
இராணுவ பலத்தாலும் பொருளாதார ரீதியாகவும் பலம் வாய்ந்த இஸ்ரேல், இந்த போரை நிறுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்தத் தாக்குதலை ஆதரிக்கப் போவதில்லை என கூறியுள்ளார்.
இந்த இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதலானது இன்று உலக மகா யுத்தமாக மாற்றமடைந்துக் கொண்டு வருகிறது என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாடுகள் தலையிட ஆரம்பித்துள்ள நிலையில் ஐ.நா. உடனடியாக இந்த விடயத்தில் மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை