இலங்கையின் பிரபல வர்த்தகர் லலித் கொத்தலாவல காலமானார்
இலங்கையின் பிரபல வர்த்தகர் தேசபந்து லலித் கொத்தலாவல தனது 84 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை (21) காலமானார்.
அவர் செலான் வங்கியின் ஸ்தாபகத் தலைவரும், செலிங்கோ கன்சோலிடேட்டட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.
கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, லலித் கொத்தலாவல இலங்கையின் மூன்றாவது பிரதமரான சேர் ஜோன் கொத்தலாவலவின் மருமகனாவார்.
கருத்துக்களேதுமில்லை