அரசாங்கத்திடம் நிலையானதொரு பொருளாதாரக் கொள்கையில்லை! சிறிதரன் எம்.பி. குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கத்திடம் நிலையான பொருளாதாரக் கொள்கையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
தர்மபுரத்திலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்கள் தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில் எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றத்தால் தங்களது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது அரசாங்கம் ஐ.எம்.எவ். இன் இரண்டாம் கட்ட நிதியைப் பெறுவதற்காக நாட்டுமக்களுக்கு பெரும் சுமையைகொடுத்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை