வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர்மீது தாக்குதல்; தாக்கியவரைக் கைது செய்யுமாறுகோரிப் போராட்டம்!
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை ஊழியர் மீது ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 32 வயதுடைய பிரதேச சபை திண்மக்கழிவு அகற்றும் ஊழியரே தாக்கப்பட்டுள்ளார்.
மாவடிச்சேனை எம்.பி.சீ.எஸ். வீதியில் குறித்த நபர் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நிலையில், அந்த வீதியிலுள்ள வர்த்தக நிலைய உரிமையாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் கடமை புரிந்த ஊழியர் தாக்கப்பட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக ஏனைய ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தாக்குதலுக்குள்ளான ஊழியர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஊழியர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை பொலிஸார் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏனைய ஊழியர்கள் திண்மக்கழிவு அகற்றும் இயந்திரங்களை குறித்த ஊழியர் தாக்கப்பட்ட வீதியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (
கருத்துக்களேதுமில்லை